லீக் ஆட்டங்களில் தான் பங்கு கொண்ட 18 போட்டிகளின் மூலம் 34 புள்ளிகள் எடுத்து வலுவான இரண்டாம் இடத்தில் இருக்கும் ஏடிகே எஃப்சி அணி, 18 போட்டிகளில் 30 புள்ளிகள் எடுத்து அதற்கடுத்த மூன்றாவது இடத்தில் இருக்கும் பெங்களூரு எஃப்சி அணியை அதன் சொந்த மண்ணில் சந்தித்தது. மார்ச் 14 அன்று நடக்க இருக்கும் ஐஎஸ்எல் இறுதி போட்டிக்கு வெல்லும் அணியை தீர்மானிக்கப் போகும் போட்டி என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த சீசனில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பெங்களூரு எஃப்சி, கடைசி சில லீக் ஆட்டங்களில் ஏனோ சொதப்பியது. அதுவும், தன்னுடைய கடந்த மேட்சை இதே ஏடிகே எஃப்சிக்கு எதிராக விளையாடி 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடித்ததால், இன்று எப்படியாவது அந்த அணியை வெல்ல வேண்டும் என்று மும்முரமாக இருந்தது.
ISL 2019-20 : அரையிறுதியில் அசத்திய பெங்களூரு.. ஏடிகே அணியை வீழ்த்தி வெற்றி